திருச்சியில் களத்தில் வென்றான் குறும்பட வெளியீட்டு விழா நடைபெற்றது…

IMG 20240827 WA0003 - திருச்சியில் களத்தில் வென்றான் குறும்பட வெளியீட்டு விழா நடைபெற்றது...

திருச்சி கலையரங்கத்தில் “களத்தில் வென்றான்” குறும்பட வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் தயாரிப்பில், இயக்குனர் வார்பேர்ட் விக்கி இயக்கத்தில், நடிகர்கள் வேல ராமமூர்த்தி, திருச்சி ராஜேஷ் துரையார் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கதாபாத்திரங்கள் நடிப்பில் வெளிவந்துள்ள குறும்படம் “களத்தில் வென்றான்”. படத்திற்கு அருண் கணேஷ் இசை அமைத்துள்ளார். பாடகி சுருதி பின்னணி பாடலை பாடியுள்ளார். எடிட்டிங் பணியை சுதர்சன் செய்துள்ளார்.
இந்த படத்தின் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 25 ஆம் தேதி திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவிற்கு சாருபாலா தொண்டைமான் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக நடிகர் வேல ராமமூர்த்தி, ஶ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, நடிகர் வீரன் செல்வராசு, தொழிலதிபர் பரமசிவன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு படத்தை பாராட்டி சிறப்புரையாற்றினர். விழாவிற்கான ஏற்பாடுகளை நடிகர் திருச்சி ராஜேஷ் துரையார் மற்றும் வார்பேர்ட் விக்கி ஆகியோர் செய்திருந்தனர்.

இதையும் படிக்க  இருசக்கர வாகனங்கள் மீது கார் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு !

img 20240827 wa00055471697207386944088 - திருச்சியில் களத்தில் வென்றான் குறும்பட வெளியீட்டு விழா நடைபெற்றது...

மேலும் இவ்விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, சர்வதேச ஜல்லிக்கட்டு தொகுப்பாளர் செங்குட்டுவன், சுரேஷ் தேவர், அல்லூர் சீனிவாசன், ஜல்லிக்கட்டு ஒன்டிராஜ், ஜல்லிக்கட்டு ராஜேஷ் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
படத்தில் நடித்தவர்களுக்கும், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *