கோவையில் தங்க நகை பூங்கா – முதல்வர் அறிவிப்பு தொழிலாளர்கள் பட்டாசு வெடிக்கும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்…

கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று வருகை புரிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை கெம்பட்டிகாலனி பகுதியில் தங்க நகை பட்டறைக்கு நேரில் சென்று தங்க நகை தொழில் புரியும் பொற்கொல்லர்கலின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அவரிடம் கோவையில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்க வேண்டும் கூட்டுறவு சொசைட்டி அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொற்கொல்லர்கள் முன்வைத்தனர் .

WhatsApp Image at PM ()
WhatsApp Image at PM ()

இந்நிலையில் இன்று காலை கலைஞர் நூலக அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய முதலமைச்சர் கோவையில் தங்க நகை பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்பை அறிவித்தார்.

முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து கெம்பட்டி காலனி பகுதியில் தங்க நகை தொழிலாளர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இந்த கொண்டாட்டமானது அனைத்து தங்க நகை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த சங்கத்தின் தலைவர் பாண்டியன், நேற்றைய தினம் இந்த பகுதியில் முதல்வர் நேரில் வருகை தந்து எங்கள் குறைகளை கேட்டு அறிந்தார் எனவும், அப்போது நாங்கள் விடுத்த கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக தங்க நகை பூங்கா கோவையில் அமைக்கப்படும் என முதல்வர் என்று அறிவித்துள்ளது மகிழ்ச்சியை அளிப்பதாகவும் இது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விஸ்வகர்மா தங்க நகை தொழில் புரியும் சமூகத்திற்கும் மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்தார்.

இதையும் படிக்க  ராஜீவ் காந்தி நினைவு தினம் இன்று

மேலும் முதல்வன் திரைப்படத்தில் வருவதைப் போலவே உடனடியாக தங்கள் கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றி காண்பித்துள்ளதாக தெரிவித்த அவர் மேலும் கூட்டுறவு சொசைட்டி அமைத்து தர வேண்டும், பொற்கொல்லர் நல வாரியம் என்பதை ஐந்தொழில் நலவாரியம் என்று மாற்றித் தர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஆழியாறு பாசன கால்வாய்களில் கலக்கும் தென்னை நார் கழிவு நீரால் விவசாய நிலங்கள் பாதிப்பு..

Thu Nov 7 , 2024
பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா தலைமையில் விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுப்பணித்துறை, வேளாண்துறை, வருவாய் துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர் அப்போது கோட்டூர், ஆனைமலை, சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள PAP பாசன விவசாயிகள் தென்னை நார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக விவசாய […]
IMG WA jpg

You May Like