முதல்வரின் திறனாய்வுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு மாணவர்களின் திறனை ஊக்குவிப்பதற்காக நடத்தப்பட்ட முதல்வரின் திறனாய்வுத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை (நவ. 6)  இன்று வெளியிடப்படுகிறது.

மாநிலத்தின் அனைத்து அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளிலும் பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவிகளின் திறனை ஊக்குவிக்கும் நோக்கில் முதல்வரின் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வின் மூலம் 500 மாணவர்களும், 500 மாணவிகளும் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு இளநிலைப் பட்டப்படிப்பு வரை மாதம் ரூ.1,000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.

இந்த ஆண்டுக்கான தேர்வில் தமிழகம் முழுவதும் 1,03,756 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

மாணவர்கள் தங்களது முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து அறிந்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதையும் படிக்க  விண்டோஸ் பாதிப்பு எதிரொலி : கோவையில் விமான சேவைகள் ரத்து !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நபார்டு வங்கியில் காலியாக உள்ள நிதி துறை பணியிடங்கள்...

Wed Nov 6 , 2024
நபார்டு வங்கியில் மூத்த காலநிலை நிதி நிபுணர் (Senior Climate Finance Specialist) மற்றும் தலைமை நிதி அதிகாரி (Chief Financial Officer) பதவிகளில் விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 2 வயது வரம்பு: மூத்த காலநிலை நிதி நிபுணர் பதவிக்கு: 35 – 55 வயது தலைமை நிதி அதிகாரி பதவிக்கு: 52 – 57 வயது தகுதிகள்: மூத்த காலநிலை நிதி நிபுணர்: நிதி, நிதி […]
image editor output image1438820006 1730869691700 | நபார்டு வங்கியில் காலியாக உள்ள நிதி துறை பணியிடங்கள்...