
நேற்று இரவு (வியாழக்கிழமை) தோன்றிய பௌர்ணமி நிலவை “மலர் நிலவு” என்று அழைக்கின்றனர், என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த பௌர்ணமி நிலவு, வேசாக் என கொண்டாடப்படும் புத்த ஜெயந்தி அல்லது புத்த பூர்ணிமாவுடனும் ஒத்துப்போகிறது. 1930களில் Maine Farmers’ Almanac என்ற நிறுவனம் முழு நிலவுகளுக்கு இந்திய பெயர்களை வெளியிடத் தொடங்கியது, இந்த பெயர்கள் தற்போது பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது “கான் மூன்” என்றும் அழைக்கப்படுகிறது.