What’s app,Facebook, Instagram உள்ளிட்ட ‘META’ நிறுவனத்தின் சமூக ஊடகங்களில் செயற்கை நுண்ணறிவு(AI) சேவை இந்தியாவில் நேற்று (ஜுன் 24) முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.இதுகுறித்து மெட்டா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு(AI) உதவி சேவைகளில் ஒன்றான ‘META AI’ இப்போது What’sapp, Facebook, Instagram, Messenger, Meta AI வலைபக்கம் ஆகியவற்றில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதது.இதன்மூலம், பயனா்கள் தாங்கள் பயன்படுத்தும் சமூக ஊடகச் செயலியை விட்டு வெளியேறாமலேயே, தங்களுக்கு வேண்டிய விஷயங்களை தேடுவதற்கும் உள்ளடக்கத்தை உருவாக்கவும் குறிப்பிட்ட தலைப்புகள் பற்றி ஆழமாக அறிவதற்கும் Meta AI சேவையைப் பயன்படுத்தி கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.