மாநிலங்களவைத் தலைவராக இருந்த பியூஷ் கோயல் தற்போது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதால், மாநிலங்களவைத் தலைவராக ஜெ.பி. நட்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 24) தொடங்கியது. முதல் நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி உள்பட, உறுப்பினர்கள் பலர் எம்.பி.யாக பதவியேற்றனர். எஞ்சிய உறுப்பினர்கள் பதவியேற்பு நாளை நடைபெறவுள்ளது.இதனிடையே மாநிலங்களவைத் தலைவராக இருந்த பியூஷ் கோயல் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, மக்களவை எம்.பி.யாக பதவியேற்றதால், மாநிலங்களவைத் தலைவராக ஜெ.பி. நட்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.