பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் உலக ஓசோன் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் உலக ஓசோன் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு, பள்ளி தலைமை ஆசிரியர் உமாமகேஸ்வரி, ஓசோன் மண்டலத்தின் முக்கியத்துவம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அவசியத்தை பற்றி பேசினார். மேலும், ஒவ்வொரு மாணவரும் குறைந்தபட்சம் பத்து மரங்களை வளர்க்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

நிகழ்ச்சியை தமிழாசிரியர் பாலமுருகன் ஏற்பாடு செய்தார். இறுதியில், “பூமிக்கு ஓசோன் மண்டலம் குடையாகப் பாதுகாப்பாக இருக்கிறது” என்பதைக் குறிக்கும் விதமாக, மாணவர்கள் குடை வடிவில் வரிசையில் அமர்ந்து ஓசோன் மண்டலத்தை நினைவுகூரும் நிகழ்ச்சி நடத்தினர். அதன் கீழ் “பூமி” என எழுத்து வடிவில் அமர்ந்த மாணவர்கள், ஓசோன் மண்டலத்தின் பாதுகாப்பு அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதையும் படிக்க  போதை எதிர்ப்பு விழிப்புணர்வு: ஜமாத்தே இஸ்லாமிய ஹிந்த் மகளிரணி நிகழ்ச்சிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காரைக்குடியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது !

Tue Sep 17 , 2024
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். காரைக்குடியில் உள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்வின் முக்கியமான பகுதியாக, தந்தை பெரியார் சமூக நீதிக்காக போராடியமை மற்றும் அவரது சாதனைகள் குறித்து சிறப்பு பேச்சுகள் நடைபெற்றது. நிகழ்ச்சியின் பின்னர், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு, சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து வாழ்வதற்கான அவரது […]
IMG 20240917 WA0022 - காரைக்குடியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது !

You May Like