திருச்சி மாவட்டம் தொழில்துறைகளிலும் பல்வேறு துறைகளிலும் தொடர்ந்து முன்னேறி வருவதால் தமிழகத்தில் வளர்ந்து வரும் மாவட்டங்களின் பட்டியலில் முக்கிய இடத்தில் இருந்து வருகிறது.
இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மெட்ரோ ரயில் இயக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள், வழித்தடங்கள் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டது.
இந்த வரைவு அறிக்கையானது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்கும் நிலையில் தமிழக அமைச்சர் கே என் நேரு திருச்சியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிச்சயமாக வரும் என்றும் உறுதிப்பட தெரிவித்தார்.
சமீபத்தில் நடந்த தேர்தலிலும் திமுக சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மெட்ரோ ரயில் திருச்சியில் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக திருச்சி மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். இவ்வாறு இருக்கும் நிலையில் நிதி பற்றாக்குறை காரணமாக இந்த பணிகள் அமைக்க தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.
சமீபத்தில் மெட்ரோ ரயிலுக்கான வழித்தடங்கள் எந்தெந்த வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் செல்லும் போன்ற
விவரங்கள் அனைத்தும் வெளியானது. இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்தது. அதாவது திருச்சி மாவட்டத்தில் மட்டும் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் ஆனது அறிவிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல் வழியில் சமயபுரத்தில் இருந்து வயலூர் வரை 18 கிலோ மீட்டர் தொலைவிலும், இரண்டாவது வழிதடத்தில் துவாக்குடி முதல் பஞ்சப்பூர் வரை 26 கிலோமீட்டர் தொலைவிலும், மூன்றாவது வழித்தடத்தில் ஜங்ஷன் முதல் பஞ்சப்பூர் வரை 23.3 கிலோமீட்டர் தொலைவிலும் அமைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமயபுரம் முதல் வயலூர் வரை 18 கிலோ மீட்டர் வழித்தடத்தில் மொத்தம் 17 நிறுத்தங்கள் இடம் பெற்றுள்ளன இதேபோல் இரண்டாவது வழித்தடத்தில் துவாக்குடி முதல் பஞ்சப்பூர் வரை செல்லும் வழித்தடத்தில் 16 நிறுத்தங்களும் அதேபோல் ஜங்ஷன் முதல் பஞ்சப்பூர் வரை செல்லும் வழித்தடத்தில் II நிறுத்தங்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
திருச்சி மாவட்ட மக்கள் அனைவரும் எப்போது மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். இந்த மெட்ரோ ரயில் ஆனது இரண்டு அடுக்கு பாலமாக அமைக்கப்படும் என்றும் அதற்கான இடங்களை ஆய்வு செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.