Sunday, April 20

இருசக்கர வாகனத்தில் வீலிங் சாகசம் செய்த இளைஞர்களுக்கு நூதன முறையில் ஜாமின்  வழங்கிய நீதிபதி


திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள புலிவலம் பகுதியில் வசிப்பவர் நிவாஸ் இவர் தனது நண்பர்கள் (சிறுவர் 2நபர் )உடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் வீலிங் சாகசம் செய்து சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார் இந்த காணொளி காவல்துறை கவனத்திற்கு சென்றது.

இதனை தொடர்ந்து புலிவலம் காவல்துறையினர் நிவாஸ் மற்றுமவர் நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்து திருச்சி மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிவாஸ் உள்பட அவரது நண்பர்களை ஆஜர்

இதை தொடர்ந்து
நிவாஸ் ஜாமீன் மனு தாக்கல் செய்யார் இது குறித்து நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து நீதிபதி மணிமொழி நூதன நிபந்தனையுடன் ஜாமீன் உத்தரவை வழங்கினார்

இருசக்கர வாகனத்தில் சென்று வீலிங் சாகசம் செய்த நிவாஸ் உள்ளிட்ட இரண்டு நண்பர்களுக்கும் இரு வார காலம் போக்குவரத்து காவல்துறையிடம் இருந்து போக்குவரத்தை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கப்பட்டது

இந்த நூதன நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் உத்தரவு வீலிங் சாகசம் ஈடுபடும் இளைங்கர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என வழக்கறிஞர் மற்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அண்மை காலமாக இது போன்ற சாகசம் செய்முறை எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது

இதையும் படிக்க  "ஊழலை எதிர்த்து ராஜினாமா செய்த காவலர்: பொதுமக்களின் பாராட்டு"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *