திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கங்களான திருச்சிராப்பள்ளி போர்ட், டைமண்ட் சிட்டி, திருச்சி சிட்டி, ஹனி பி, திருச்சி நெக்ஸ்ட்ஜென்ட், திருச்சி ஐ டொனேஷன் மற்றும் திருச்சி தென்றல் ஆகிய சங்கங்கள் சார்பில் “எங்களுக்காக வாழும் உங்களுக்காக” என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா ஜோசப் கண் மருத்துவமனை வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ரோட்டரி சங்கம் ஆளுநர் ராஜா கோவிந்தசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும் சிறப்பு அழைப்பாளராக ஜமால் முகமது கல்லூரியின் முதல்வர் ஜார்ஜ் அமலரெத்தினம் மற்றும் ஜோசப் கண் மருத்துவமனையின் சேர்மன் பிரதீபா ஆகியோர் கலந்து கொண்டனர். ரோட்டரி சங்கம் மாநில செயலாளர் மின்னல் சரவணன் மற்றும் ஜோசப் கண் மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி சுபா பிரபு ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். மேலும் இவ்விழாவில் அரசு மற்றும் அரசு சாரா மெட்ரிகுலேஷன் சிபிஎஸ்சி உள்ளிட்ட பள்ளிகளில் இருந்து 25 ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சிறந்த கல்லூரிக்கான விருதை திருச்சி ஜமால் முகமது கல்லூரி மற்றும் திருச்சி ஜமால் முகமது கல்வியியல் கல்லூரி பெற்றது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து சங்க தலைவர்கள், செயலாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஜோசப் கண் மருத்துவமனையின் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Leave a Reply