தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 1986 ஆம் ஆண்டு இளநிலை வேளாண்மை அறிவியல் பயின்ற வேளாண் மாணவர்கள் 38 வருடங்களுக்கு பிறகு இன்று பல்கலைக்கழக வளாகத்தில் சந்தித்து தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
இம்முன்னாள் மாணவர்களில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வெ கீதாலட்சுமி, முன்னாள் ஐ ஜி பெரியய்யா, பல்கலைக்கழக முதன்மையர் (மாணவர் நலம்) முனைவர் நா.மரகதம் மற்றும் பல்வேறு முதன்மை வங்கிகளின் அதிகாரிகள், கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர், உர கண்காணிப்பு அதிகாரி என பல்வேறு துறைகளின் உயர் பதவிகளில் இருக்கும் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த நெகிழ்ச்சியான தருணத்தினை தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு தங்கள் மகிழ்ச்சியினை பரிமாறிக் கொண்டனர்.
Leave a Reply