தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அமைந்துள்ள குற்றால அருவிகளில், சமீபத்தில் பெய்த சாரல் மழையால் மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, போலீசார் அங்கு குளிக்க தடை விதித்திருந்தனர். ஆனால், நீர்வரத்து சீராக உள்ளதைக் கருத்தில் கொண்டு, சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
ஆங்கில புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு, குற்றால மெயின் அருவி கரையில் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளியலில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், புலியருவி உள்ளிட்ட பிற அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருவதால், அந்த பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.