Monday, January 13

“ஊழலை எதிர்த்து ராஜினாமா செய்த காவலர்:பொதுமக்களின் பாராட்டு”

தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலையத்தில் பணியாற்றிய முதல் நிலை காவலர் பிரபாகரன், காவல்துறையில் நிலவும் அநீதிகள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஊழல் நடவடிக்கைகளை எதிர்த்து, தனது பதவியை ராஜினாமா செய்ய காவல்துறை தலைமை ஆணையர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கடிதத்தில், காவல்துறையில் பணியாற்றும் போது ஏற்படும் அச்சம், காவலர்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலைமைகள், மற்றும் தனது நேர்மையான நடவடிக்கைகளுக்கு உயர் அதிகாரிகள் தடை ஏற்படுத்திய விவரங்களை பிரபாகரன் வெளிப்படுத்தியிருந்தார். குறிப்பாக, சோதனை சாவடியில் பணியாற்றும் போது மண் கடத்தல் தொடர்பான வாகனங்களை கைப்பற்றி காவல் நிலையத்திற்கு கொண்டுவந்தாலும், உயர் அதிகாரிகள் பணம் பெற்றுக் கொண்டு அவற்றை விடுவித்ததாக குற்றச்சாட்டை அவர் முன்வைத்துள்ளார்.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், தென்காசி மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்தாலும், பிரபாகரன் தொடர்ந்து தனது நிலைப்பாட்டை வலியுறுத்தி வருகிறார். இதற்கிடையில், ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், பிரபாகரனின் நேர்மையையும், ஊழலுக்கு துணை போகவில்லை என்பதையும் பாராட்டி, “ரியல் ஹீரோ” என புகழ்ந்து, அவரது புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிக்க  "பொள்ளாச்சி அருகே பேருந்து விபத்தில் மாணவர்கள் பலி"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *