வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சங்கத்தின் புதுச்சேரி கிளையின் ஆலோசனை கூட்டம் அண்மையில் வெற்றிகரமாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் முனைவர் கோவிந்தசாமி தலைமையேற்று சிறப்புரையாற்றினார். முன்னாள் மாணவர் சங்க ஆலோசகர் திரு S.K.V. ஜெயக்குமார், முனைவர் வெங்கடேசகுமார், திரு பிரபாகர், திரு ராகேஷ் உள்ளிட்ட பல முன்னாள் மாணவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். பாகூர் சட்டமன்ற உறுப்பினர் திரு செந்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சங்கத்தின் சமூக சேவைகளைப் பாராட்டி உற்சாகமூட்டினார்.
கூட்டத்தின் முக்கிய அம்சமாக, முன்னாள் மாணவர் சங்கம் இதுவரை மேற்கொண்ட சமூகப் பணிகள் விவரிக்கப்பட்டதுடன், 2025 ஆம் ஆண்டுக்கான சமூக சேவைகள் தொடர்பான திட்டங்கள் முன்மொழியப்பட்டன. மாதந்தோறும் ஒருமுறை சங்கத்தின் கூட்டங்களை நடத்தி, தொடர்ச்சியான சமூக சேவைகளை முன்னெடுக்கவும், ஏழை மற்றும் எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் செயல்பாடுகளை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டது. புதுச்சேரி கிளை உறுப்பினர்களின் பல்துறை நிபுணத்துவத்தை பயன்படுத்தி, சமூகத்திற்கு பயனளிக்கும் திட்டங்களை செயல்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரு செந்தில் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டு கூட்டம் இனிதே நிறைவடைந்தது.