
பொள்ளாச்சி அருகே உள்ள ஒத்தக்கால் மண்டபம் கிராமத்தில் ஸ்ரீ ராஜகணபதி வள்ளி கும்மி கலைக்குழுவின் ஐந்தாவது அரங்கேற்ற விழா நடந்தது. இந்த விழாவில், வள்ளிக்கும்மி நடன நிகழ்ச்சியில் பங்கேற்க, கடந்த ஒரு மாதமாக பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சொலவம் பாளையம், ஒத்தக்கால் மண்டபம், பிரிமியர் மில், கல்லாபுரம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்கள் நடனக் கலையில் திறமையை வெளிப்படுத்தினர்.
தேர்ச்சி பெற்ற இந்த நடன கலைஞர்கள், அரங்கேற்ற நிகழ்ச்சியில் நாட்டுப்புறப் பாடல்களுக்கு ஒய்யாரமாக நடனமாடி, சிறியவர்களும் பெரியவர்களும் உள்பட அனைவரும் தங்கள் கலைநயத்தை அழகாக வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.