இந்தியாவில் முதியோர் பராமரிப்பு மற்றும் உதவப்படும் வாழ்க்கை சேவை பிரிவில் முன்னணி அமைப்பாக திகழும் அதுல்யா சீனியர் கேர், கோயம்புத்தூரின் ரேஸ் கோர்ஸ் சாலையில் இன்று, “முதியோரை கனிவுடன் பராமரித்தல்” என்ற பெயரில் ஒரு வாக்கத்தான் நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தியது.
மூத்த குடிமக்களின் நலவாழ்வு மற்றும் கண்ணியத்தை வலியுறுத்திய இந்நிகழ்வில் தன்னார்வலர்கள், கார்ப்பரேட் பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் என 200-க்கும் அதிகமான நபர்கள் ஆர்வத்தோடு பங்கேற்றனர்.
வாக்கத்தானில் கலந்து கொண்டவர்கள் அதுல்யா சீனியர் கேர் வழங்கிய டி-ஷர்ட்கள் மற்றும் தொப்பிகளை அணிந்து உற்சாகமாக இந்த நடை பயணத்தில் கலந்து கொண்டனர்.
இந்த வாக்கத்தான் நிகழ்வு மூத்த குடிமக்களின் தனித்துவமான தேவைகளை கனிவுடன் பரிசீலிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. பங்கேற்பாளர்களும், பார்வையாளர்களும் மூத்த குடிமக்கள் எதிர்கொள்ளும் சவால்களை புரிந்துகொள்வதை வலியுறுத்தியது.
நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய அதுல்யா சீனியர் கேர்-ன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் ஸ்ரீனிவாசன், “இன்றைய நிகழ்வில் அதிக எண்ணிக்கையில் பங்கேற்பாளர்களின் ஆர்வமிக்க பங்கேற்பு, நமது சமூகத்தில் முதியோர் பராமரிப்பு மீது வளர்ந்து வரும் விழிப்புணர்வு மற்றும் அக்கறையை வெளிப்படுத்துகிறது. உண்மையிலேயே முக்கியமான குறிக்கோள்களுக்காக மக்களை ஒருங்கிணைக்கிற செயல்தளங்களை உருவாக்குவதில் அதுல்யாவில் செயல்படும் நாங்கள் நம்புகிறோம்,” என்று தெரிவித்தார்.
அவரது உரை மேலும், “நமது முதியோர்களின் மிக முக்கிய தேவைகள் பற்றி விழிப்புணர்வை இன்றைய நிகழ்வு உயர்த்தியிருக்கிறது மற்றும் ஒருங்கிணைந்த சமூக நடவடிக்கையின் சக்திக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. நமது சமூகத்தின், குறிப்பாக நமது உண்மையான அக்கறையையும், பெருமதிப்பையும் பெறுவதற்கு தகுதியுள்ள நமது மூத்த குடிமக்களின் நலவாழ்வு பற்றி அதுல்யாவில் நாங்கள் ஆழமான அக்கறை கொண்டிருக்கிறோம். நமது முதியோர்கள் பராமரிக்கப்படுவது மட்டுமன்றி கொண்டாடப்படவும், மதிக்கப்படவும் வேண்டும் என்பதற்காக அக்கறை மற்றும் கனிவு கலந்த கலாச்சாரத்தை வளர்ப்பதற்காக நாங்கள் திட்டமிட்டு செயலாற்றும் பல வழிமுறைகளுள் இந்த வாக்கத்தான் நிகழ்வும் ஒன்றாகும்” என்று கூறினார்.
Leave a Reply