தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் பிசான பருவ சாகுபடிக்காக கருப்பாநதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையில் இன்று முதல் 91 நாட்கள் (31-3-2025 வரை) 25 கனஅடி வீதம் தண்ணீர் வழங்கப்படும்.
100 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணை, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இதன் மூலம் கிருஷ்ணாபுரம், சொக்கம்பட்டி, குமந்தாபுரம் உள்ளிட்ட 14 கிராமங்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கின்றது. மேலும், வடகிழக்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் அதிகரித்தால், கூடுதல் தண்ணீர் திறக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.