சிவகங்கை மாவட்டம் காரைக்குடி எம்பி அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த எம்பி கார்த்திக் சிதம்பரம், சீமான் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி வருண் குமார் விவகாரத்தில் கருத்து தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:”அரசியல் தலைவரும், ஐபிஎஸ் அதிகாரியும் பொது வெளியில் விவாதம் செய்வது நல்லதல்ல. இந்த விவகாரத்தில் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி தலையிட்டு சட்டம் மற்றும் நிர்வாக ரீதியாக தீர்வு காண வேண்டும்.”
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு:
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அவர், “இந்த வழக்கில் தனிநபர் ஈடுபட்டதாக கூறப்படுவது சந்தேகத்திற்குரியது. வழக்கில் முன்னேற்றம் இல்லாவிட்டாலும், சிபிஐ விசாரணை தேவையில்லை,” என்றார்.
நாடு ஒரே தேர்தல் திட்டம்:
நாடு ஒரே தேர்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இது விரோதமானது. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பாஜகவிடம் இல்லை. எனவே, இந்த மசோதா நிறைவேற வாய்ப்பு குறைவு,” என்றார்.
அரசு பள்ளிகள் மற்றும் மகளிர் உரிமைத்தொகை:அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த தனியாரின் பங்களிப்பு தேவையானது என்றும், மகளிர் உரிமைத்தொகை 12 மாதங்களுக்கு வழங்கப்படும் என்பதால் பொங்கல் தொகுப்பில் ரூ.1000 வழங்காதது பெரிய குற்றம் அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
அண்ணாமலைக்கு சோசியல் மீடியா விமர்சனம்:பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து அவர், “அஷ்டமத்து சனி காலத்தில் ஆறுபடை வீடு சென்று சாட்டை அடி வாங்கினால் நிவாரணம் கிடைக்கும் என சமூக ஊடகங்களில் கூறப்படுகிறது. இதனால், அவர் இவ்வாறு நடந்து கொள்கிறார்,” என நகைச்சுவையாக தெரிவித்தார்.