பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புதுமையான முறையில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி, இன்று எல்லப்பிள்ளை சாவடி குழந்தைகள் மருத்துவமனை அருகே சுமார் 40-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை ஒருங்கிணைத்து, அவற்றிற்கு மலர்வளையம் சூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து ஊர்வலமாக சென்ற போராட்டக்காரர்கள், விலை உயர்வு பொதுமக்கள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை சுட்டிக்காட்டி கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த நூதன போராட்டம் பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து.