சட்டசபையில் மதுவிலக்கு திருத்த சட்டமசோதா தாக்கல்….

கள்ளச்சாராய விற்பனையை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்டனைகள் கடுமையாக்கப்படும் என அறிவித்த நிலையில், மசோதாவை அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்தார்.

இந்த சட்டத்திருத்தத்தின் மூலம், கள்ளச்சாராயத்தை தயாரித்து விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் – 1937ன்படி, விதிகளை மீறி மது இறக்குமதி, ஏற்றுமதி செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். மேலும், கள்ளச்சாராய விற்பனைக்காக பயன்படுத்தப்படும் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.

மது அருந்தப் பயன்படுத்தப்படும் உரிமையற்ற இடங்கள் மூடப்பட்டு சீலிடப்படும். தண்டனை பெற்ற ஒருவரை அந்த பகுதியில் இருந்து நீக்குவதற்காக, மதுவிலக்கு மற்றும் புலனாய்வு அதிகாரியால் விண்ணப்பம் செய்யும் சட்டத்திருத்தமும் கொண்டுவரப்பட்டுள்ளது.

இத்துடன், தண்டனைகள் மற்றும் அபராத தொகைகளையும் அதிகரித்து, அதிகாரிகளுக்கு  அதிகாரம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க  ராயல் கேர் மருத்துவமனைக்கு JCI அங்கீகாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருச்சி காவிரியாற்றில்<br>முதலைகள் நடமாட்டம் !

Sat Jun 29 , 2024
திருச்சி காவிரி ஆற்றில் மக்கள் புழக்கம் அதிமுள்ள பகுதியில் இரு முதலைகள் நடமாட்டம் இருப்பதாகவும் அவற்றை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. திருச்சி சிந்தாமணி காவிரிப்பாலம் பகுதியில், ஆற்றுக்குள் உள்ள மணல் திட்டுகளில் இரு முதலைகள் படுத்திருப்பதை சிலர் கண்டனர். இந்த தகவல் பரவியதையடுத்து பாலத்தில் சென்றவர்கள் அவற்றை வேடிக்கை பார்க்க குவிந்தனர். இது குறித்து வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டன.இதற்கிடையில் காவிரி பாலத்தில் […]
IMG 20240629 WA0008 - திருச்சி காவிரியாற்றில்<br>முதலைகள் நடமாட்டம் !

You May Like