Sunday, April 27

கணவர் இறந்த துக்கத்தில் மனைவி குழந்தையுடன் தற்கொலை…

பொள்ளாச்சி அருகே உள்ள மரம்பிடுங்கி கவுண்டன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த மணிமேகலை, தையல் வேலை பார்த்து வந்த  இவரது கணவர் அஜித்குமார் கடந்த 2021 ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள குட்டையில் மீன் பிடிக்கச் சென்ற போது சேற்றில் சிக்கி உயிரிழந்தார்.

கணவர் இறந்த துக்கத்தில் மனைவி குழந்தையுடன் தற்கொலை...

இவர்களுக்கு 4 வயதில் ராகவ் என்ற மகன் உள்ளார் தற்போது 3 மாதங்களாக  மாமனார் வீரன் வீட்டில் வசித்து வந்தனர் இந்த நிலையில் கணவர் இறந்த துக்கத்தில் வாழ்ந்து வந்த மணிமேகலை குழந்தையுடன்  நேற்று இரவு முதல் காணவில்லை உறவினர்கள் அக்கம் பக்கம் தேடியும் தகவல் கிடைக்காததால் அப்பகுதியில் உள்ள கல்லுக்குழியில் சென்று பார்த்த போது மணிமேகலை மற்றும் குழந்தை ராகவ் இறந்த நிலையில் கிடந்ததை  கண்டு அதிர்ச்சி அடைந்தனர் பின்னர் போலீசருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அங்கு விரைந்த நெகமம் காவல் நிலைய போலீசார் இறந்த மணிமேகலை மற்றும்  குழந்தை ராகவ் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிக்க  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி...
கணவர் இறந்த துக்கத்தில் மனைவி குழந்தையுடன் தற்கொலை...

கணவர்  இறந்து விட்டதால் மணிமேகலை குழந்தையுடன் மன வருத்தத்தில் இருந்ததாகவும் மேலும் மாமனருடன் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது இருப்பினும் இவர்களது இறப்பிற்கு வேறு காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தாயும் குழந்தையும் கல்லுக்குழியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *