பொள்ளாச்சி தாலுக்கா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாலக்காடு சாலையில் கீழே தவற விட்ட 2.50 லட்சம் ரூபாயை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞருக்கு போலீசார் பாராட்டு.
பொள்ளாச்சி ராஜா மில் சாலையில் உள்ள மோட்டார் உதிரி பாகங்கள் விற்பனை கடையில் பணியாற்றும் தேவனுர் புதூரை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் பாலக்காடு சாலையில் செல்லும் போது ரோட்டில் தவறவிட்ட 2.50 லட்சம் ரூபாயை தாலுக்கா காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் சந்தோஷ்குமாரின் நேர்மையான செயலுக்கு போலிசார் பாராட்டு தெரிவித்தனர்.