Sunday, April 27

திருமணத்திற்காக சேர்த்து வைத்த 150 பவுன் கொள்ளை சம்பவத்தில் இருவர் கைது

தேவகோட்டை  ராம் நகர் ஆறாவது வீதியில் வசித்து வருபவர் சஞ்சீவி ஞானசேகர் தேவகோட்டையில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளியில்ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

திருமணத்திற்காக சேர்த்து வைத்த 150 பவுன் கொள்ளை சம்பவத்தில் இருவர் கைது

இவரது மனைவி வெளியூரில் ஆசிரியராகவும், மகள் தபால் நிலைய ஊழியராகவும் பணி புரிந்து வரும் நிலையில், கடந்த இருபதாம் தேதி மூவரும் வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்றுள்ளனர். தபால் அலுவலகத்தில் பணி முடிந்து மூன்று மணி அளவில் வீட்டிற்கு வந்த போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த சுமார் 150 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்ததில் திருச்சி மாவட்டம் துவாக்குடியைச் சேர்ந்த ராஜா என்கின்ற அழகு ராஜா, (வயது 53) திருச்சி நாகமங்கலத்தைச் சேர்ந்த நாகராஜ் என்ற பூனை நாகராஜ் (வயது 50) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 90 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள், இரு சக்கர வாகனம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றி  விசாரணை நடத்தி வருகின்றனர் தமிழ்நாட்டில் இவர்கள் இருவரும் பல்வேறு பகுதிகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

இதையும் படிக்க  திருச்சி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சிறப்பு நிர்வாகக் குழு கூட்டம்: முப்பெரும் விழா முன்னேற்பாடுகள் ஆலோசனை.....

மேலும் ஆசிரியர் அடுத்த மாதம் தனது மகளின் திருமணம் நடக்க இருப்பதால் நகைகளை வீட்டில் வைத்துள்ளார். அப்போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *