
பொள்ளாச்சி அருகேயுள்ள திப்பம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், மாணவர்கள் இன்று பொங்கல் விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடினர். B.Com, BBA போன்ற துறைகளின் மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் குழுவுடன் சேர்ந்து பந்தல் அமைத்து, வண்ண கோலமிட்டு, கரும்பு, பழம், தேங்காய் போன்ற பொருட்களை கடவுக்கு மாலை போட்டு, தமிழர் பாரம்பரிய பொங்கலை சிறப்பித்தனர்.
இந்த விழாவில் சலங்கையாட்டம், கும்மி போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் முக்கிய பங்கு வகித்தன. அதனைத்தொடர்ந்து, காளை, சேவல், குதிரை போன்ற கால்நடைகளையும் கொண்டு வந்து பொங்கல் விழாவை மேலும் சிறப்பித்தனர். ஒவ்வொரு துறை மாணவர்களும் தங்கள் துறையின் பொங்கலை, மற்ற மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொடுத்து, வெகுசிறிய மகிழ்ச்சி மற்றும் அன்பு பரிமாற்றத்தை ஏற்படுத்தினர்.