3 வயது பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து பலி

பொள்ளாச்சி அருகே உள்ள கஞ்சம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அம்மேகவுண்டனூர் பகுதியில் கார்த்திக் மனைவி சத்யா தம்பதிகள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். 

இவர்களுடைய மூன்று வயது நைநிதா எனும் பெண் குழந்தை வீட்டின் முன்புறம் உள்ள வராண்டாவில்       விளையாடி கொண்டிருந்தது அப்போது அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் எதிர்பாராத விதமாக குழந்தை விழுந்து உள்ளது.


இந்நிலையில் குழந்தையை காணவில்லை என பெற்றோர் தேடி வந்த போது தண்ணீர் தொட்டியில் குழந்தையின் உடல் மிதந்து கொண்டு இருந்ததை கண்டு கண்ணீர் விட்டு அழுதனர் இதைக் கண்ட பொதுமக்கள் போலிசாருக்கு தகவல் அளித்தனர் போலிசார் தண்ணீர் தொட்டியில் இருந்த குழந்தையின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து கோமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜதுரை தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மூன்று வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்த உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கோவை ராயல் கேர் மருத்துவமனைக்கு நரம்பியல் அறுவை சிகிச்சையில் சர்வதேச அங்கீகாரம்...

Mon Nov 4 , 2024
கோவை நீலாம்பூர் பகுதியில் இயங்கி வரும் ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அண்மையில் நரம்பியல் அறுவை சிகிச்சையில் சிறந்த விளங்கும் மருத்துவ மையமாக USA சர்ஜிகல் ரிவ்யூ கார்ப்பரேஷனின் எஸ் ஆர். சி. அங்கீகாரத்தை பெற்றது. அதனைத்தொடர்ந்து ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் க.மாதேஸ்வரன் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இது குறித்து ராயல் கேர் மருத்துவமனை தலைவர் கா மாதேஸ்வரன் கூறுகையில் ராயல் கேர் மருத்துவமனை […]
IMG 20241104 WA0026 | கோவை ராயல் கேர் மருத்துவமனைக்கு நரம்பியல் அறுவை சிகிச்சையில் சர்வதேச அங்கீகாரம்...