Sunday, April 27

கோவை ராயல் கேர் மருத்துவமனைக்கு நரம்பியல் அறுவை சிகிச்சையில் சர்வதேச அங்கீகாரம்…

கோவை நீலாம்பூர் பகுதியில் இயங்கி வரும் ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அண்மையில் நரம்பியல் அறுவை சிகிச்சையில் சிறந்த விளங்கும் மருத்துவ மையமாக USA சர்ஜிகல் ரிவ்யூ கார்ப்பரேஷனின் எஸ் ஆர். சி. அங்கீகாரத்தை பெற்றது. அதனைத்தொடர்ந்து ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் க.மாதேஸ்வரன் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

கோவை ராயல் கேர் மருத்துவமனைக்கு நரம்பியல் அறுவை சிகிச்சையில் சர்வதேச அங்கீகாரம்...

இது குறித்து ராயல் கேர் மருத்துவமனை தலைவர் கா மாதேஸ்வரன் கூறுகையில் ராயல் கேர் மருத்துவமனை அனைத்து நோயாளிகளுக்கும் தரமான சிகிச்சையை மேம்படுத்துவதற்கும், தரமான சிகிச்சையை வழங்குவதற்கும் அர்ப்பணிப்புடன் உள்ளது என்பதை அறிவிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்” என மருத்துவமனையின் தலைவர் டாக்டர் க. மாதேஸ்வரன் கூறினார். மேலும், அவர் கூறுகையில், “ராயல் கேர் மருத்துவமனைக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் நரம்பியல் அறுவை சிகிச்சையில் துறையில் மிகச் சிறந்த மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ சேவை வழங்கி வருகிறது என்பதை குறிக்கிறது” என்றார்.

கோவை ராயல் கேர் மருத்துவமனைக்கு நரம்பியல் அறுவை சிகிச்சையில் சர்வதேச அங்கீகாரம்...

ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நரம்பியல்,முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். க. மாதேஸ்வரன், நரம்பியல் அறுவை சிகிச்சையில் முதுகலை அறுவை சிகிச்சை நிபுணராக அங்கீகாரம் மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க  கோவையில் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

மேலும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர். கே. ரகுராஜ பிரகாஷ் மற்றும் டாக்டர். ஆர். செந்தில்குமார் ஆகியோர் நரம்பியல் அறுவை சிகிச்சையில் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர் என்ற அங்கீகாரம் பெற்றுள்ளனர் மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *