மத்திய அரசின் இணையதளம் மூலம் NEET/JEE/CUET இலவச ஆன்லைன் பயிற்சி!

மத்திய கல்வி அமைச்சகம், “சதி” (Sathee) எனும் புதிய இணையதளத்தின் மூலம் மாணவர்களுக்கு நீட், JEE, CUET போன்ற நுழைவு தேர்வுகளுக்கு இலவச ஆன்லைன் பயிற்சிகளை வழங்குகிறது. இந்தியாவின் உயர்கல்வி மற்றும் அரசு பணிகளில் சேரும் போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் இப்பயிற்சிகளை NCERT பாடத்திட்டம், வினாத்தாள், மாடல் தேர்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த பேராசிரியர்கள் வழங்குகின்றனர்.

நுழைவு தேர்வுகளுக்கான பயிற்சி

NEET: எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான ஒருங்கிணைந்த நுழைவு தேர்வு.

JEE: IIT மற்றும் NIT போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புக்கான நுழைவு தேர்வு.

CUET: மத்திய பல்கலைக்கழகங்களில் UG மற்றும் PG படிப்புகளில் சேர்க்கைக்கான தேர்வு.

CLAT: மத்திய சட்ட பல்கலைக்கழகங்களில் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு.

https://sathee.prutor.ai/ என்ற இணையதளத்தில் இலவசமாக பதிவு செய்து பயிற்சிகளைப் பெறலாம். இந்த தளத்தில் உள்ளடக்கப்பட்ட பாடத்திட்டங்கள், புத்தகங்கள், வினாத்தாள்கள், மாடல் தேர்வுகள் மற்றும் தேர்வுமுறைகள் அனைத்தும் மாணவர்களின் பயிற்சிக்கு உதவுகின்றன. இதுவரை சுமார் 4.5 லட்சம் பேர் இந்த இணையதளத்தில் முன்பதிவு செய்துள்ளனர்.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC), வங்கி (IBPS), மற்றும் ICAR போன்ற தேர்வுகளுக்கான பயிற்சிகளும் இத்தளத்தில் வழங்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியின் மூலம் உயர்கல்விக்கு தயாராகும் மாணவர்களும், அரசு வேலைவாய்ப்புகளுக்குத் தயாராகும் இளைஞர்களும் இலவசமாக பயிற்சி பெற முடியும்.

இதையும் படிக்க  CUET 2024 நுழைவுத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

3 வயது பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து பலி

Mon Nov 4 , 2024
பொள்ளாச்சி அருகே உள்ள கஞ்சம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அம்மேகவுண்டனூர் பகுதியில் கார்த்திக் மனைவி சத்யா தம்பதிகள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.  இவர்களுடைய மூன்று வயது நைநிதா எனும் பெண் குழந்தை வீட்டின் முன்புறம் உள்ள வராண்டாவில்       விளையாடி கொண்டிருந்தது அப்போது அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் எதிர்பாராத விதமாக குழந்தை விழுந்து உள்ளது. இந்நிலையில் குழந்தையை காணவில்லை என பெற்றோர் தேடி வந்த போது தண்ணீர் தொட்டியில் குழந்தையின் உடல் […]
The matter came to light after his dead body was f 1710527689071 1723213482693 | 3 வயது பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து பலி