Friday, January 24

புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான விவேகானந்தன் சிறையில் தூக்கிட்டு தற்கொலை….

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, வாய்க்காலில் வீசப்பட்ட சம்பவம் கடந்த மார்ச் மாதத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், கருணாஸ் மற்றும் விவேகானந்தன் என்ற 57 வயதான நபர் கைது செய்யப்பட்டு, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனையடுத்து, இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், விவேகானந்தன் சிறையில் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவேகானந்தன் மற்றும் கருணாஸ் இருவரும் முந்தைய நாட்களில் பலமுறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால், அவர்களை கண்காணிக்க சிறையில் காவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். விவேகானந்தன் தொடர்ந்து தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று காலை அவர் கழிப்பறையில் தனது துணியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சிறை அதிகாரிகள் உடனடியாக விவேகானந்தனின் உடலை மீட்டு, காலாப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிக்க  சட்டசபையில் மதுவிலக்கு திருத்த சட்டமசோதா தாக்கல்....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *