Thursday, October 30

தமிழகத்தில் நவம்பர் 23-ந்தேதி கிராம சபை கூட்டம்

தமிழகத்தில் நவம்பர் 1-ந்தேதி நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நவம்பர் 23-ந்தேதி தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில், கிராம சபை கூட்டத்தை ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் நவம்பர் 23-ந்தேதி காலை 11 மணிக்கு நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிராம மக்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க ஏதுவாக, கூட்டம் நடைபெறும் இடம், நேரம் உள்ளிட்ட விவரங்களை கிராம மக்களுக்கு முன்னரே அறிவிக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க  புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை பாராளுமன்றத்தில் மீண்டும் விவாதத்தில் எடுத்துக்கொண்டு, குறைகளை களைய வேண்டும் - திருச்சியில் வழக்கறிஞர் சங்கங்கள் கோரிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *