Sunday, April 20

மாநில அளவிலான தடகளப் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலம் வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பு…

ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப்போட்டியில் சுமார் 37 மாவட்டங்களில் இருந்து பங்கேற்ற 2517 மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர் . இதில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த புறத்தாகுடியில் அமைந்துள்ள அரசு உதவிபெறும் தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு  வரலாறு பாடப் பிரிவில் பயிலும் மாணவி மேக்லின் டோரத்தி என்ற மாணவி 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார் அதேபோல 1500 மீட்டர் ஓட்டத்தில் வெண்கல பதக்கம் வென்றார்.

தொடர்ந்து தங்கம் மற்றும் வெண்கலம் வென்ற மேக்லின் டோரத்திக்கு பள்ளி சார்பில் மாலை அணிவித்து மேல தாளங்கள் முழங்க புரத்தாகுடி பேருந்து நிலையத்தில் இருந்து பள்ளி வரை மேல தாளங்களுடன் பேரணியாக மாணவிக்கு உற்சாக வரவேற்பு அளித்து தடகள வீராங்கனை மாணவி மேக்லின் டோரத்தியை பள்ளி தலைமை ஆசிரியர் ராபர்ட் செல்வன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

தொடர்ந்து மாணவி மற்றும் மாணவியின் பெற்றோர்கள் உடற்கல்வி ஆசிரியர் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது .

இதையும் படிக்க  TTV TROPHY SEASON 2 கிரிக்கெட் போட்டி...

இதுகுறித்து மாணவி மேக்லின் டோரத்தி கூறுகையில் தற்போது நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலம் பதக்கங்களை வென்றது எனக்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது .

மேலும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு பெற உள்ளேன் .

எனக்கு தமிழக அரசு சார்பில் உதவிகள் கிடைக்கப்பெற்றால் இன்னும் பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று உலக கோப்பைகள் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பேன் என மாணவி தெரிவித்தார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *