கோவை மாநகராட்சி 80வது வார்டில் உள்ள செல்வபுரம் மாநகராட்சி ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில், பொதுச் சுகாதார குழு தலைவர் பெ. மாரிசெல்வன் தலைமையில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
அதன் பின்னர், 2024-2026 மறு கட்டமைப்புக்கான தலைவரும், துணைத் தலைவரும் தேர்வுசெய்யப்பட்டனர். புதிய தலைவர்களுக்கும், துணைத் தலைவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, பெ. மாரிசெல்வன் வாழ்த்துகள் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர்கள் தேவ சகாயம், தனலட்சுமி, சுகாதார ஆய்வாளர் தனபால், வார்டு செயலாளர் நா. தங்கவேலன், பகுதி துணைச் செயலாளர்கள் பழக்கடை முத்து, முருகன், என்.ஜே. முருகேசன் மற்றும் புதிய பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Leave a Reply