
கோவை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில், சுந்தராபுரத்தில் புதிய ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறக்கப்பட்டது. இந்த விழாவில் நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன் ரிப்பன் வெட்டி ஷோரூமை திறந்து வைத்தார். அபிராமி மருத்துவமனை இயக்குனர் குந்தவிதேவி குத்து விளக்கேற்றி சிறப்பித்தார். அபிராமி குழும தலைவர் டாக்டர் பெரியசாமி முதல் விற்பனையை துவக்கி வைத்து, ஆனைமலைஸ் டொயோட்டா வின் துணை தலைவர் பிரசாத்கிருஷ்ணன் முதல் கொடுப்பனவு பெற்றார்.
முன்னதாக, ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் வரவேற்றுப் பேசினார். அவர், “நமது ஷோரூம் மாவட்டத்தின் அனைத்து முக்கிய சாலைகளிலும் உள்ளது. பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வேஷ்டி, பேன்ஸி பார்டர், ரிங்கிள் பிரீ, சுபமுகூர்த்தம், எம்ப்ராய்டரி, பட்டு மற்றும் பல வகையான சட்டை ரகங்கள், டி சர்ட்கள், பெண்களுக்கான காட்டன், பட்டு சேலைகள் மற்றும் லெக்கின்ஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனைக்காக உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விழாவில் முன்னாள் குறிச்சி நகராட்சி தலைவர் பிரபாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
