25 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல்…

52 ஆண்டுகளின் பழமைவாய்ந்த சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் (பிரஸ் கிளப்) கடந்த பல ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்த நிலையில், 25 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்வரும் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது.

பொதுக்குழுவால் அமைக்கப்பட்ட 12 பேர் கொண்ட சிறப்பு வழிகாட்டுதல் குழுவின் கோரிக்கையின் பேரில், சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நீதிபதி பாரதிதாசன் வெளியிட்ட அறிவிப்பின் படி, அடுத்த மாதம் மன்றத்தின் தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர், பொருளாளர், இணைச் செயலாளர் மற்றும் ஐந்து குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும்.

தேர்தல் காலக்கட்டங்கள்

வேட்புமனு தாக்கல்: நவம்பர் 29 முதல் டிசம்பர் 7 வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை.

வேட்புமனு பரிசீலனை: டிசம்பர் 9, பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை.

வேட்புமனு திரும்பப் பெறல்: டிசம்பர் 10.

இறுதி வேட்பாளர் பட்டியல்: டிசம்பர் 10 மாலை 6 மணிக்கு.

வாக்குப்பதிவு: டிசம்பர் 15, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.

முடிவுகள்: வாக்கு எண்ணிக்கை அதே நாளில் மாலை 6 மணிக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் முதன்மை உறுப்பினர்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் மற்றும் போட்டியிடும் தகுதி உண்டு.

இதையும் படிக்க  ஆம்ஸ்ட்ராங் கொலை - டைரக்டர் நெல்சன் மனைவியிடம் போலீசார் விசாரணை...

சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் கடைசியாக 1999-ம் ஆண்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இவ்வாண்டு நடைபெறும் தேர்தல், மன்றத்தின் புதியகட்டத்தை உருவாக்கும் முக்கிய நிகழ்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஹோண்டா நிறுவனம் மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்...

Fri Nov 29 , 2024
இந்தியாவின் மின்சார வாகன சந்தையை கவரும் வகையில், ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (ஹெச்எம்எஸ்ஐ) நிறுவனம் ஆக்டிவா இ மற்றும் க்யுசி1 ஆகிய இரண்டு புதிய மின்சார ஸ்கூட்டர் ரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்டுக்கு 34 சதவீதம் வளர்ச்சி விகிதத்தில் முன்னேறி வரும் மின்சார வாகன சந்தைக்கு போட்டியிடும் நோக்குடன், ஹோண்டா இந்த ஸ்கூட்டர்களை மாற்றக்கூடிய மற்றும் நிலையான பேட்டரிகளுடன் வடிவமைத்துள்ளது. பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோகார்ப், டிவிஎஸ் […]
image editor output image913194135 1732876012230 | ஹோண்டா நிறுவனம் மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்...