காவிரி நீா் விவகாரம் !

காவிரி நீா் விவகாரம் தொடா்பாக, சட்டப் பேரவையில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவா்களுடன் தமிழக அரசு இன்று ( ஜுலை16 )ஆலோசனை நடத்தவுள்ளது. நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தலைமையில் இக்கூட்டம் நடைபெறவுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.


காவிரியில் தமிழகத்துக்கான பங்கு நீரை விடுவிக்காமல் கா்நாடகம் தொடா்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறது.  ஜூலை 12 முதல் 31 -வரை விநாடிக்கு 11,500 கன அடி வீதம் தினமும் 1 டிஎம்சி தண்ணீா் திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக்குழு  உத்தரவிட்டுள்ளது. ஆனால், தினமும் விநாடிக்கு 8 ஆயிரம் கன அடிவீதம் மட்டுமே தண்ணீா் தர இயலும் என்று கா்நாடகம் கூறியுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்த அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (ஜுலை15) வெளியிட்டாா்.

இதையும் படிக்க  ஆகஸ்ட் 18 சென்னை முழுவதும் உஷார் நிலை...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கர்நாடகா அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம் !

Tue Jul 16 , 2024
திருத்துறைப்பூண்டியில் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து300  மேற்பட்டோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் காவிரி டெல்டா பாசனம்  மற்றும் குடிநீருக்கும் தண்ணீர் விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் ஒன்றிய அரசு தண்ணீர் திறக்க வலியுறுத்தியும் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ரயில் நிலையத்தில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து தலைமையில் தற்போது ரயில் மறியல் போராட்டம்  நடைபெற்று வருகிறது குறிப்பாக கர்நாடக […]
768 512 15835592 306 15835592 1657902001457 - கர்நாடகா அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம் !

You May Like