புதுச்சேரி முத்தியால்பேட்டை ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் பெருமாள் திருக்கோவிலின் 53வது பிரமோற்சவ விழாவை முன்னிட்டு, ஹயக்ரீவ பெருமாள் சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
முத்தியால்பேட்டையில் ராமகிருஷ்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவ திருக்கோவிலில், 53வது பிரமோற்சவ விழா கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. இந்த விழாவில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட ஹயக்ரீவ பெருமாளுக்கு சோடச தீபாராதனை செய்யப்பட்டது. பின்னர் பெருமாள் சேஷ வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, பெருமாளை தரிசித்து ஆசீர்வாதம் பெற்றனர்.