Monday, July 14

சிறுத்தை தாக்கி 4 வயது சிறுமி உயிரிழப்பு…


பொள்வாச்சி அருகே உள்ள வால்பாறை ஊசிமலை எஸ்டேட்டில், 4 வயது சிறுமி சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஐயூன் அன்சாரி, அவரது மனைவி நசீரான் ஆகியோர் தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களது மகள், 4 வயது அப்துல் கதும், வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, புதரில் பதுங்கியிருந்த சிறுத்தை வேகமாக பாய்ந்து, சிறுமியை கடித்து இழுத்து கொண்டு அடர்ந்த காட்டுக்குள் சென்றுள்ளது. தாயார் கூச்சலிட்டதுடன், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சிறுத்தையை துரத்தினர். இதனால் சிறுமியை கீழே போட்டுவிட்டு, சிறுத்தை காட்டுக்குள் மறைந்தது.

அதுவரை கடித்து குதறியதில், சிறுமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனை கண்டு, பெற்றோர் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர், பிரேதத்தை கைப்பற்றி, வால்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த பரிதாப நிகழ்வு அப்பகுதியில் உள்ள பொதுமக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 
இதையும் படிக்க  பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் உலக நோயாளி பாதுகாப்பு தின உறுதிமொழி நிகழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *