தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்!

தமிழகத்தில் 6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான இடங்களை இறுதி செய்யுமாறு மாவட்ட நிா்வாகங்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.தமிழகத்தில் 2022-ஆம் ஆண்டு 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இதன்மூலம், தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 36-ஆக அதிகரித்தது. இவை தவிர, 34 தனியாா் மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், பெரம்பலூா், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் தலா ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

இதையும் படிக்க  இளவரசன் கொலை வழக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

டெல்லியில் பலத்த பாதுகாப்பு....

Sat May 25 , 2024
மக்களவை 6-ஆம் கட்டத் தோ்தலையொட்டி, டெல்லியில் 60,000 போலீசார்களும் ட்ரோன்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. டெல்லி, ஹரியாணா உள்ளிட்ட 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் இன்று (மே 25) காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, டெல்லி காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மேலும் […]
107743574 | டெல்லியில் பலத்த பாதுகாப்பு....