2008 முதல் சேலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ASURRE AGROWTECH LIMITED கம்பெனியின் மூலமாக ரூபாய் 500 முதல் பல லட்சம் வரை சேமிப்பு திட்டம் உள்ளது என்றும் 500 வீதம் தொடர்ந்து ஐந்து வருடங்கள் கட்டினால் ஐந்து வருடங்களுக்கு மொத்தம் கட்டிய பணம் 30 ஆயிரம் கம்பெனி ரிட்டன் தருவதாக சொன்னது 38800 ஆயிரம் பிளஸ் 10% போனஸ் டோட்டல் அமௌன்ட் 41 ஆயிரத்து 800 ரூபாய் தருவதாக பாண்டு மூலமாக உத்தரவாதம் அளித்தனர் .
இதன் அடிப்படையில் தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா போன்ற மாநிலங்களில் பல கோடி ரூபாய் இத்திட்டத்தின் மூலம் வசூல் செய்து ஐந்து வருடம் கட்டிய நபர்களுக்கு பணம் திருப்பி செலுத்த வில்லை நிர்வாகம் இதனைத் தொடர்ந்து மீண்டும் ஒரு பெயரில் புதிய கம்பெனி AKSARA HOUSING CO_ OPERATIVE SOCIETY LIMITED முதல் கம்பெனியின் பிளான் மூலமாக பல கோடிகளை பொதுமக்களிடம் பெற்றுக் கொண்டு தொடர்ந்து இரண்டாவது கம்பெனியிலும் இதே பிளானில் பல கோடிகள் வசூல் செய்து உள்ளனர்.
இந்த நிர்வாகத்தில் பணம் போட்ட பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நிர்வாகித்து இடம் கேட்ட பொழுது உங்களுக்கு பணம் தர முடியாது அதற்கு பதிலாக உங்கள் ஒவ்வொருவரின் பெயரிலும் காலி இடத்தை பத்திரப்பதிவு செய்து தருகிறேன் என்று வாக்களித்தனர் இதேபோல் தொடர்ந்து கடந்த ஐந்து வருட காலமாக வாக்குறுதி மட்டும் தருகின்றனர் இதுநாள் வரை எந்த யாருடைய பெயரிலும் இடம் பத்திரப்பதிவு ஆகவில்லை பணமும் திருப்பி தரப்படவில்லை
இதே போல் தொடர்ந்து மூன்றாவது பெயரில் கம்பெனி ஆரம்பித்து அதிலும் பல லட்சங்கள் பொதுமக்களிடம் இருந்து பெற்றுக் கொண்டு அந்த பொது மக்களையும் அலைகழித்து உள்ளது இந்த நிர்வாகம் பாதிக்கப்பட்ட பொது மக்களின் மூலமாக சேலம் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது அந்த வழக்கின் விசாரணை அடிப்படையில் கோவை நீதிமன்றத்தில் மாத மாதம் விசாரணை நடைபெற்றது .
இதில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோவை நீதிமன்ற வளாகத்தில் ஒன்று சேர்ந்து கம்பெனியின் முதலாளி தங்க பாலன் அவர்களை சுற்றி வளைத்தனர் கோவை ரேஸ் கோர்ஸ் B 4 காவல் நிலைய ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்