பொள்ளாச்சி அருகே அங்கலக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த முள்ளம்பன்றி, மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு பிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனைமலைக்கு அருகிலுள்ள அங்கலக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்திருந்த நிலையில், அங்கலக்குறிச்சி ஊராட்சி தூய்மை பணியாளர்கள் மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, முள்ளம்பன்றி ஒன்று அங்கு நடமாடியது. இதைக் கண்ட பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் பயந்து அலறியடித்து ஓடினர்.
உடனடியாக மருத்துவமனை ஊழியர்கள் வனத்துறையினருக்கு தகவல் வழங்கினர். வனத்துறையினர் முள்ளம்பன்றியை பிடிக்க முயன்றபோது, அது குடியிருப்பு பகுதிக்குள் ஓடி மறைந்தது. மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு, வனத்துறையினர் முள்ளம்பன்றியை பாதுகாப்பாக பிடித்து, ஆழியாறு அடர்ந்த காடுகளில் விட்டனர்.
Leave a Reply