170-ஆவது ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி விழா கொண்டாட்டம்…

IMG 20240827 WA0012 - 170-ஆவது ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி விழா கொண்டாட்டம்...

கோயம்புத்தூர் ஸ்ரீ நாராயண மெஷின், ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளை, மற்றும் கோயம்புத்தூர் ஸ்ரீ நாராயண குரு அறக்கட்டளை ஆகியவை இணைந்து 170-ஆம் குருஜெயந்தி விழாவை விமரிசையாக கொண்டாடின. விழா காலை 5:30 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் கலசபூஜையுடன் தொடங்கியது. எஸ்.என்.எம் கல்வி நிறுவனங்கள் சார்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பூக்கோலம் போட்டியில் பங்கேற்றனர்.விழாவின் சிறப்பு விருந்தினராக திரு. K. ஜனார்த்தனன் பங்கேற்று, தமிழ் கருத்தரங்கு சொற்பொழிவை விளக்கேற்றி துவக்கி வைத்தார். எஸ்.என்.எம் கல்வி நிறுவனத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஸ்ரீ நாராயண குருவின் கொள்கைகளை பக்தர்களுக்கு எடுத்துரைத்தனர். திரு. P. சாமி அவர்கள் ஜெயந்தி விருந்தை துவக்கி, அனாதை இல்லம், முதியோர் இல்லங்களுக்கான பக்தர்கள் உள்ளிட்ட சுமார் 2000 மக்களுக்கு உணவு விநியோகம் செய்யப்பட்டது.img 20240827 wa00131906327262181203689 - 170-ஆவது ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி விழா கொண்டாட்டம்...மாலை 4 மணியளவில் திரு. K. பாகுலேயன் தலைமையில் ஜெயந்தி ஊர்வலம் நிகழ்ந்தது. இந்த ஊர்வலத்தில், அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீ நாராயண குருவின் திருவுருவச் சிலை சாய்பாபா காலனி வீதிகள் வழியாக எடுத்துச் செல்லப்பட்டது. எஸ்.என்.எம் நிறுவனம் மற்றும் மகளிர் அணியினர் ஊர்வலத்தில் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர்.மாலை 6 மணிக்கு ஜெயந்தி சமையல் நிகழ்வு தொடங்கியது, இதில் திரு. N. மோகனன் வரவேற்புரை வழங்கினார். மிஷன் தலைவர் டி.எஸ். ஹரிஷ் குமார் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் திரு. கே. வேலாயுதம், ஜெயந்தி அறிக்கையை வழங்கினார். சிவகிரி மடத்தில் இருந்து வந்த ஸ்ரீமத் சிவ ஸ்வரூபானந்த சுவாமிகள் குத்துவிளக்கேற்றி அருளுரை வழங்கினார்.சிறப்பு விருந்தினராக Dr. A.V. அனுப் சிறப்புரையாற்றினார், மேலும் எஸ்.என்.எம் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் அவரை கௌரவித்தனர். SNGET தலைவர் திரு. P. சாத்துக்குட்டி ஜெயந்தி உரையை வழங்கினார். இதில், கட்டுரை போட்டி, ஆன்லைன் பேச்சுப்போட்டி மற்றும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.SNM துணைத் தலைவர் திரு. எண். மணிகண்டன், இணைச்செயலாளர் திரு. பி.எஸ். சோமன், பொருளாளர் திரு. சீ. கங்காதரன், எஸ்.என்.எம் எம்.எஸ் தலைவர் திரு. V. சந்திரகுமார், பொருளாளர் திரு. M. சிவன், SNGET பொருளாளர் திரு. P.V. சஜிஷ்குமார் மற்றும் SNM குழு உறுப்பினர்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். SNGYM தலைவர் திரு. வி. வினோத்குமார் நன்றியுரையுடன் விழா நிறைவுற்றது.

இதையும் படிக்க  கள்ளச்சாராயத்துக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 33-ஆக உயர்வு! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts