தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கலை கல்லூரியில், தமிழ்த்துறை உதவி பேராசிரியர் ஜெயவாணி ஸ்ரீ, கடந்த மாதம் 18-ஆம் தேதி வகுப்பறையில் மாணவர்களை அவமதித்ததாக புகார் எழுந்துள்ளது. பேராசிரியர் சாதி ரீதியாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்டதால், மாணவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க கோரி தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், கல்லூரியில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, கல்லூரிக்கு நிர்வாகம் காலவரையற்ற விடுமுறை அறிவித்துள்ளது. மாணவர்களை சாதிப்பெயர் சொல்லி திட்டிய பேராசிரியர் ஜெயவாணி ஸ்ரீ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மாணவர்களின் போராட்டம் மற்றும் வகுப்புகளை புறக்கணிப்பினால் ஏற்பட்டுள்ள உள்நிலைமை காரணமாக, கல்லூரி நிர்வாகம் இந்த முடிவை எடுக்க நேர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply