கோவையில் இரண்டு நாட்கள் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகள போட்டி சிறப்பாக நிறைவு பெற்றது. இந்த போட்டி, கோவை மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில் 63வது மாவட்ட அளவிலான ஜூனியர் மற்றும் சீனியர் தடகள போட்டி மற்றும் 8வது மயில்சாமி மற்றும் 3வது சங்கரன் நினைவுகோப்பை நிகழ்ச்சியாக, கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்த போட்டியில் பள்ளி, கல்லூரி மற்றும் தனியார் விளையாட்டு சங்கங்களைச் சேர்ந்த 1800-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.
மாணவர்கள் பிரிவில், ஜெனிஷிஸ் ஸ்போர்ட்ஸ் ஃபவுண்டேசன் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றது, மற்றும் மாணவியர் பிரிவில் யுனிக் ஸ்போர்ட்ஸ் அகாடமி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.
மேலும் சீனியர் ஆண்கள் பிரிவில் மேற்கு மண்டல காவல் துறை அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது, பெண்கள் பிரிவில் யுனிக் ஸ்போர்ட்ஸ் அகாடமி சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அத்லெடிக் சங்க தலைவர் வால்டர் தேவாரம் கோப்பைகள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட தடகள தொழில்நுட்ப வல்லுநர் சீனிவாசன் மற்றும் கோவை மாவட்ட தடகள சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Leave a Reply