புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மருத்துவமனையில் அனுமதி…

dinamani 2024 09 26 zrtws0q2 namasivam - புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மருத்துவமனையில் அனுமதி...

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து, பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் திடீரென உடல்நலக்குறைவால் மூலக்குளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்டனர். பரிசோதனைகளில் அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மருத்துவர்கள் அவரை தீவிர கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படிக்க  தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *