புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மருத்துவமனையில் அனுமதி…

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து, பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் திடீரென உடல்நலக்குறைவால் மூலக்குளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்டனர். பரிசோதனைகளில் அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மருத்துவர்கள் அவரை தீவிர கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படிக்க  ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவம்: மறுவுருவாக்க மையம் திறப்பு...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

புதுச்சேரியில் டீ வியாபாரியை  கொலை செய்த ரவுடி கும்பல்...

Thu Sep 26 , 2024
புதுச்சேரி சனாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாபு (44) இவரது மனைவி ராஜலட்சுமி இவர்களுக்கு இரண்டு மகள் ஒரு மகன் உள்ளனர். இவர் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தொழிற்ப்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு டீ சப்ளை செய்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை பாபு வழக்கம் போல் தொழிற்சாலைகளுக்கு டீ சப்ளை செய்ய தனது இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் தொழிற்பாட்டைக்கு வந்து கொண்டிருந்த போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம […]
IMG 20240926 WA0018 | புதுச்சேரியில் டீ வியாபாரியை  கொலை செய்த ரவுடி கும்பல்...