புதுச்சேரியில் டீ வியாபாரியை  கொலை செய்த ரவுடி கும்பல்…

புதுச்சேரி சனாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாபு (44) இவரது மனைவி ராஜலட்சுமி இவர்களுக்கு இரண்டு மகள் ஒரு மகன் உள்ளனர். இவர் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தொழிற்ப்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு டீ சப்ளை செய்து வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை பாபு வழக்கம் போல் தொழிற்சாலைகளுக்கு டீ சப்ளை செய்ய தனது இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் தொழிற்பாட்டைக்கு வந்து கொண்டிருந்த போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் சிலர் அவர்கள் மறைத்து வைத்திருந்த ஆய்தங்களால் பாபுவை சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலயே இரத்த வெள்ளதில் சரிந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் போலீசார். உயிரிழந்த பாபுவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுகாக புதுச்சேரி கதிர்காமத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை செய்ததில் பாபுவை பிரபல ரவுடியான புளியங்கொட்டை ரங்கராஜன் மற்றும் அவரது கூட்டாளிகள் கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இதையும் படிக்க  புதுச்சேரி குருசுமாநகரில் வேளாங்கண்ணி மாதா திருத்தேர் கொடியேற்ற விழா...

இதனை அடுத்து கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவர்களை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைத்துள்ளனர். இதற்கிடையே பாபுவை கொலை செய்த கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வழுதாவூர் சாலையில் உள்ள மேட்டுப்பாளையம் காவல் நிலைய வாயலில் சாலை மறியல் செய்து தர்னா போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அவர்களிடம் வடக்கு கண்காணிப்பாளர் வீரவல்லவன் பேச்சு வார்த்தை நடத்தி கலைய செய்தார். மேலும் பட்டப்பகலில் டீ வியாபாரியை கொலை செய்த சம்பவத்தால் அப்பகுதியில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஒரே மாதத்தில் 700 முட்டைகளை சாப்பிட்டு கொலஸ்ட்ரால் குறைப்பு...

Thu Sep 26 , 2024
ஹார்வார்ட் மருத்துவ மாணவர் டாக்டர் நிக் நோர்விட்ஸ், ஒரு மாதத்தில் 700க்கும் மேற்பட்ட முட்டைகளை உண்டு, அவரது கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், எதிர்பார்க்காமல், அவரது எல்டிஎல் (“மோசமான” கொலஸ்ட்ரால்) அளவு 20% குறைந்தது. நாள் ஒன்றுக்கு 24 முட்டைகளை சாப்பிட்ட நோர்விட்ஸ், “கீடோஜெனிக்” உணவமைப்பை பின்பற்றியுள்ளார். இந்தச் செயலின் மூலம் உணவு முறைகள் தொடர்பான விவாதத்தை சமூக ஊடகங்களில் தூண்டுவதற்காக அவர் இதை செய்ததாக குறிப்பிட்டுள்ளார். […]
image editor output image 653810767 1727370971576 | ஒரே மாதத்தில் 700 முட்டைகளை சாப்பிட்டு கொலஸ்ட்ரால் குறைப்பு...