
ரிலையன்ஸ் பவுண்டேஷன் மற்றும் புதுச்சேரி அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் நலத்துறை இணைந்து மணவெளி சட்டமன்ற தொகுதி டி.என். பாளையம் பகுதியில் கால்நடை மலட்டுத்தன்மை நீக்க சிறப்பு சிகிச்சை முகாமை நடத்தினர். இந்த முகாமை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாண்புமிகு சட்டப்பேரவை தலைவருமான திரு செல்வம் ஆர் அவர்கள் தொடங்கி வைத்தார். கால்நடை பராமரிப்பு மற்றும் நலத்துறை இணை இயக்குனர் டாக்டர் ஆர். குமரவேல் தலைமையில் மாடுகள் மற்றும் ஆடுகளுக்கு மலட்டுத்தன்மை நீக்கம், குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை மற்றும் பொது சிகிச்சைகள் வழங்கப்பட்டன. மேலும், கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ரிலையன்ஸ் பவுண்டேஷன் நிர்வாகிகள், அப்பகுதி முக்கிய பிரமுகர்கள், கால்நடை வளர்ப்போர் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.