புதுச்சேரி மக்களவைத் தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 5 மையங்களில் பலத்த பாதுகாப்பு வரும் ஜூன் 4ம் தேதி நடைபெறும் புதுச்சேரி மக்களவைத் தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, தேர்தல் அதிகாரி சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ம் தேதி அன்று, புதுச்சேரியில் உள்ள அனைத்து வகை மதுபானக் கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இது தேர்தல் சூழலில் அசாம்பாவிதங்களை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். புதுச்சேரி உள்ள 2 மையங்களிலும் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் துணை ராணுவப்படையினர் மற்றும் 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய பிராந்தியங்களைச் சேர்த்து மொத்தம் 1500 போலீசார் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தேர்தல் அதிகாரிகளுக்கு ஒத்துழைத்து, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் அமைதியை காக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.