புதுச்சேரி: 2025 ஆம் ஆண்டிற்கான அரசு நாட்காட்டி மற்றும் குறிப்பேட்டை (டைரி) புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று சட்டப்பேரவை வளாகத்தில் வெளியிட்டார்.
ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரி அரசு சார்பில் நாட்காட்டி மற்றும் குறிப்பேடு வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான நாட்காட்டியில் துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோரின் புகைப்படங்களுடன், ஒவ்வொரு மாதத்திற்கும் புதுச்சேரியின் நினைவுச்சின்னங்கள் மற்றும் பிரபல கோவில்களின் அழகிய படங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், சட்டமன்ற உறுப்பினர்கள் பாஸ்கர் மற்றும் லட்சுமிகாந்தன் ஆகியோர் கலந்து கொண்டு நாட்காட்டியை பெற்றுக்கொண்டனர்.
புதுச்சேரியின் பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நாட்காட்டி, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.