“புதுச்சேரியில் ரூ.2 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது”

புதுச்சேரியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கஞ்சா, கூல் லிப், ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களின் பழக்கத்தால் சீரழிந்து வருகின்றனர். காவல்துறையினரும் போதை பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், லாஸ்பேட்டை – பெத்துசெட்டிபேட் சுப்பிரமணியர் கோவில் தெருவில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பெரிய அளவில் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதனையடுத்து லாஸ்பேட்டை மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீசார், சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று,சந்தேகப்படும்படி நின்றிருந்த செந்தில்வேலன் மற்றும் முகேஷ் குமார் ஆகிய இருவரை விசாரித்தனர்

விசாரணையில் ,பெங்களூரில் இருந்து ஹான்ஸ்,கூல்லிப்,பான் மசாலா போன்ற போதை பொருட்களை வாங்கி வந்து புதுச்சேரியில் விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து இருவர் மேலும் வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காலப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அங்கலக்குறிச்சி அருகே சுற்றுலா பயணிகள் வந்த வாகனம் விபத்து

Sat Oct 5 , 2024
தமிழகத்தில் தற்போது தொடர் விடுமுறை என்பதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கும் சென்ற வருகின்றனர்.இந்நிலையில் இன்று ஆழியார் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் சிலர் நான்கு சக்கர வாகனத்தில் வந்தனர். அப்போது அங்கலகுறிச்சி தனியார் கல்லூரி அருகே வேகத்தடை ஏறும்பொழுது கட்டுப்பாட்டை இழந்த நான்கு சக்கர வாகனம் சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியதில் பயணம் செய்த இரண்டு குழந்தைகள், ஒரு பெண் உள்ளிட்ட நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர். பாதிக்கப்பட்டவர்களின்அலறல் […]
IMG 20241005 WA0027 | அங்கலக்குறிச்சி அருகே சுற்றுலா பயணிகள் வந்த வாகனம் விபத்து