
தமிழகத்தில் தற்போது தொடர் விடுமுறை என்பதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கும் சென்ற வருகின்றனர்.இந்நிலையில் இன்று ஆழியார் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் சிலர் நான்கு சக்கர வாகனத்தில் வந்தனர்.
அப்போது அங்கலகுறிச்சி தனியார் கல்லூரி அருகே வேகத்தடை ஏறும்பொழுது கட்டுப்பாட்டை இழந்த நான்கு சக்கர வாகனம் சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியதில் பயணம் செய்த இரண்டு குழந்தைகள், ஒரு பெண் உள்ளிட்ட நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர்.
பாதிக்கப்பட்டவர்களின்அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ஆழியாறு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.